சினிமா துளிகள்

பிரபுதேவாவே நடிக்கிறார் : ஷக்தி சிதம்பரம் டைரக்‌ஷனில் `சார்லி சாப்ளின்' 3-ம் பாகம் + "||" + The 3rd part of `Charlie Chaplin 'in Shakti Chidambaram Direction

பிரபுதேவாவே நடிக்கிறார் : ஷக்தி சிதம்பரம் டைரக்‌ஷனில் `சார்லி சாப்ளின்' 3-ம் பாகம்

பிரபுதேவாவே நடிக்கிறார் : ஷக்தி சிதம்பரம் டைரக்‌ஷனில் `சார்லி சாப்ளின்' 3-ம் பாகம்
ஷக்தி சிதம்பரம் டைரக்‌ஷனில், பிரபு-பிரபுதேவா இணைந்து நடித்த `சார்லி சாப்ளின்' படத்தின் முதல் பாகம் கடந்த 2002-ம் வருடம் திரைக்கு வந்தது.
`சார்லி சாப்ளின்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, `சார்லி சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகம், கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த படத்திலும் பிரபு-பிரபுதேவா இணைந்து நடித்தனர். இரண்டாம் பாகம் வெற்றிகரமாக ஓடுவதை தொடர்ந்து, `சார்லி சாப்ளின்' படத்தின் மூன்றாம் பாகத்தை ஷக்தி சிதம்பரம் தயாரித்து டைரக்டு செய்ய முடிவு செய்து இருக்கிறார்.

இந்த படத்திலும் பிரபுதேவாவே கதாநாயகனாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். அவருடன் 3 கதாநாயகிகள் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இதற்கிடையில், `சார்லி சாப்ளின்-2' படம் இந்தியில் தயாராகிறது. இதில், சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கிறார். ஷக்தி சிதம்பரமே டைரக்டு செய்கிறார். போனிகபூர் தயாரிப்பார் என்று பேசப்படுகிறது.