சினிமா துளிகள்

தெலுங்கில் தயாராகும் `96' படத்தில் சர்வானந்த்-சமந்தா நடிக்கிறார்கள் + "||" + Saravananth-Samantha is acting in the film '96' in Telugu

தெலுங்கில் தயாராகும் `96' படத்தில் சர்வானந்த்-சமந்தா நடிக்கிறார்கள்

தெலுங்கில் தயாராகும் `96' படத்தில் சர்வானந்த்-சமந்தா நடிக்கிறார்கள்
விஜய் சேதுபதி-திரிஷா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற `96' படம், தெலுங்கில் தயாராகிறது.
கவித்துவமான காதல் படம், இது. நந்தகோபால் தயாரித்து, பிரேம்குமார் டைரக்டு செய்திருந்தார். படத்தில் வரும் ராம்-ஜானு கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதியும், திரிஷாவும் வாழ்ந்திருந்தார்கள். படம் பார்ப்பவர்களை அவர்களின் பள்ளிக்கூட காலத்துக்கே அழைத்துப்போனது போல் திரைக்கதையும், காட்சிகளும் அமைந்திருந்தன.

இந்த படம் இப்போது தெலுங்கில் தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் சர்வானந்த், திரிஷா நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

தமிழ் படத்தை இயக்கிய பிரேம்குமார், தெலுங்கு படத்தையும் இயக்குகிறார். தமிழ் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே தெலுங்கு படத்திலும் பணிபுரிகிறார்கள். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்க இருக்கிறது.