சினிமா துளிகள்

2 கதாநாயகர்களும் 2 கதாநாயகிகளும்...! + "||" + 2 heroes 2 Heroine

2 கதாநாயகர்களும் 2 கதாநாயகிகளும்...!

2 கதாநாயகர்களும் 2 கதாநாயகிகளும்...!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் இருவருக்கும், முதல் நிலையில் உள்ள கதாநாயகிகள் இருவருக்கும் இடையே புதிதாக நட்பு உருவாகி இருக்கிறது.
இரண்டு ஜோடிகளும் தலா ஒரு படத்தில் இணைந்து இருக்கிறார்கள். அந்த நட்பை 2 ஜோடிகளும் புதிய படங்கள் மூலம் புதுப்பிக்க விரும்புகிறார்கள்.

அதில், ஒரு கதாநாயகன் இரண்டு கடவுள்களின் பெயர்களை கொண்டவர். இவர் தனது நட்பில் இருக்கும் முதல்நிலை நாயகியுடன் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். அடுத்து ஒரு புதிய படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். அந்த நாயகன் அடுத்து நடிக்க இருக்கும் படங்களில் தனது நட்பில் இருக்கும் நாயகியையே ஒப்பந்தம் செய்ய சொல்கிறாராம்.

இன்னொரு ஜோடி, நம்பர் படத்தில் இணைந்தவர்கள். சமீபத்தில் அந்த படத்தின் வெற்றி விழா நடந்தது. விழா மேடையில், நாயகியின் அழகை புகழ்ந்து தள்ளினார், நாயகன். அதோடு அடுத்து ஒரு படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை நாயகியின் காதில் போட்டு வைத்தாராம்! (நாயகி சிரித்தபடி சம்மதம் சொல்லியிருக்கிறார்!)

அதிகம் வாசிக்கப்பட்டவை