சினிமா துளிகள்

நயன்தாராவின் துணிச்சல்! + "||" + Nayantara's courage

நயன்தாராவின் துணிச்சல்!

நயன்தாராவின் துணிச்சல்!
நயன்தாரா தயாரிப்பு மற்றும் வினியோக தொழிலில் துணிச்சலாக ஈடுபட்டு இருக்கிறார்.
திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் கும்பலின் கை வருடத்துக்கு வருடம் ஓங்கி வருகிறது. புது படங்களை அதன் ரிலீஸ் தேதியிலேயே `தமிழ் ராக்கர்ஸ்' இணையதளங்களில் வெளியிட்டு, பட அதிபர்களுக்கு சவாலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ் பட உலகின் `நம்பர்-1' நாயகியான நயன்தாரா சொந்த படம் தயாரிப்பது, படங்களை வினியோகம் செய்வது என்று துணிச்சலாக செயல்பட்டு வருகிறார். படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகைகளை திரையுலகிலேயே பிரபல கதாநாயகர்கள் முதலீடு செய்வது போல் நயன்தாராவும் தயாரிப்பு மற்றும் வினியோக தொழிலில் துணிச்சலாக ஈடுபட்டு இருக்கிறார்.

அவருடைய காதலர் விக்னேஷ் சிவன், மானேஜர் ராஜேஷ் ஆகிய இருவரின் பெயரில், நயன்தாரா பட தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் ஈடுபட்டு வருகிறார்!