சினிமா துளிகள்

சிம்பு படத்தில் நடிப்பது திரிஷாவா, ராஷிகன்னாவா? + "||" + Trisha in Simbu's film

சிம்பு படத்தில் நடிப்பது திரிஷாவா, ராஷிகன்னாவா?

சிம்பு படத்தில் நடிப்பது திரிஷாவா, ராஷிகன்னாவா?
`மாநாடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடிப்பது திரிஷாவா, ராஷிகன்னாவா? என்பது விரைவில் தெரியும்.
`வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை அடுத்து சிம்பு, `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷிகன்னாவை நடிக்க வைப்பது பற்றி பரிசீலனை நடந்தது.

இதுபற்றி கதாநாயகன் சிம்புவிடம் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் சொன்னபோது, சிம்பு வேறு ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். ``96 படத்துக்குப்பின் திரிஷா மீதான மோகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. அதனால் திரிஷாவை கேட்கலாம்'' என்று அவர் கூறியிருக்கிறார்.

`மாநாடு' படத்துக்கு திரிஷாவா, ராஷிகன்னாவா? என்பது விரைவில் தெரிந்துவிடும்!