சினிமா துளிகள்

‘ஆடு’ படத்தின் மூன்றாம் பாகம் + "||" + Aadu film Third part

‘ஆடு’ படத்தின் மூன்றாம் பாகம்

‘ஆடு’ படத்தின் மூன்றாம் பாகம்
‘ஆடு’ படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
2015-ம் ஆண்டு ‘ஆடு ஒரு பீகர ஜீவியானு’ என்ற படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு தயாரித்தார். மலையாளத்தின் முன்னணி நடிகர் ஜெயசூர்யா நடித்த இந்தப் படத்தை மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கினார். படம் தோல்வி அடைந்தது. ஆனால் சில நாட்களில் தொலைக்காட்சியில் வெளியிட்டபோது, இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் 2017-ம் ஆண்டு ‘ஆடு-2’ என்ற படத்தை அதே படக்குழு சார்பில், ஜெயசூர்யா நடிப்பில் எடுத்து வெளியிட்டனர். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் ‘ஆடு’ படத்தின் இரண்டாம் பாகம் வெற்றியைக் கொண்டாடிய, அதன் தயாரிப்பாளர் விஜய்பாபு, ‘ஆடு’ படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அந்தப் படத்தையும் மிதுன் மானுவேல் தாமஸ் தான் இயக்கப்போகிறாராம். நடிகரும் அதே ஜெயசூர்யா தான் என்றும் விஜய்பாபு சொல்லியிருக்கிறார்.