சினிமா துளிகள்

முன்கூட்டியே வெளியாகும் திரைப்படம் + "||" + Film released in advance

முன்கூட்டியே வெளியாகும் திரைப்படம்

முன்கூட்டியே வெளியாகும் திரைப்படம்
மலையாள உச்ச நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், மலையாள சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாகவும் இருந்து வருகிறார்.
துல்கர் சல்மான் நடிப்பில் பல வெற்றிப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது. மலையாளத்தில் அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு நான்கு படங்கள் வெளியானது. ஆனால் கடந்த ஆண்டு அவருக்கு மலையாள மொழி படம் ஒன்று கூட வெளியாகவில்லை. அதற்கு அவர் தெலுங்கு, மற்றும் இந்தி படங்களில் பிசியாக இருந்த காரணத்தால், ஓராண்டு இடைவெளி விழுந்து விட்டது. இந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஒரு யமண்டன் பிரேமகதா’ என்ற மலையாளப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை பி.சி.நோபல் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தொடங்கிய வேளையில் இதனை ஓணம் பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்தார்கள். பின்னர் சித்திரை விஷூ நாளில் வெளியிடப்படும் என்றார்கள். ஆனால் எதிர்பார்த்ததை விட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாலும், ஓராண்டாக துல்கருக்கு மலையாளத்தில் படம் வெளியாகாததாலும், வரும் மார்ச் மாதத்திலேயே இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

அதிகம் வாசிக்கப்பட்டவை