சினிமா துளிகள்

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய பாடலுக்கு தேசிய விருது? + "||" + National Award for song written by late poet Na Muthukumar

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய பாடலுக்கு தேசிய விருது?

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய பாடலுக்கு தேசிய விருது?
டைரக்டரும், நடிகருமான சமுத்திரக்கனி பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்து இருக்கிறார். அப்படி அவர் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் புதிய படம், ‘பெட்டிக்கடை.’
‘பெட்டிக்கடை’ படத்தில் கதாநாயகனாக- சமுத்திர பாண்டி என்ற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட ஆசிரியராக சமுத்திரக்கனி நடித்து இருக்கிறார். இன்னொரு நாயகனாக ‘மொசக் குட்டி’ பட நாயகன் வீரா நடித்துள்ளார். கதாநாயகிகளாக சாந்தினி, அஸ்மிதா, வர்ஷா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

சுந்தர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திரநாத், ஐஸ்வர்யா, செந்தி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மரியா மனோகர் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், இசக்கி கார்வண்ணன்.

“இந்த படத்துக்காக மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய “சுடலமாடசாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்ட சொல்லு புள்ள” என்ற பாடலை கிராமத்து வாசனையுடன் எழுதியிருக்கிறார். ஏற்கனவே தேசிய விருதுகளை பெற்ற கவிஞர் நா.முத்துக்குமாருக்கு இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார், டைரக்டர் இசக்கி கார்வண்ணன்.