சினிமா துளிகள்

``ரசிகர்கள்தான் என் நண்பர்கள்!'' + "||" + "Fans are my friends!"

``ரசிகர்கள்தான் என் நண்பர்கள்!''

``ரசிகர்கள்தான் என் நண்பர்கள்!''
ஓவியாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். ரசிகர்களை கண்டால் இவர் பயந்து ஓடுவதில்லை. அவர்களுடன் தாராளமாக கைகுலுக்குகிறார்.
ரசிகர்களுடன் நின்று நிதானமாக பேசுகிறார். `செல்பி' எடுத்துக் கொள்கிறார்.  ரசிகர்களை தனது நண்பர்கள் போல் ஓவியா நடத்துகிறார்.

ஓவியாவுக்கு ரசிகர்கள் பெருகுவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள், சக தொழில்நுட்ப கலைஞர்கள். ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சீக்கிரமே ரசிகர் மன்ற மாநாட்டை நடத்த ஓவியா முடிவு செய்து இருக்கிறார்.

அந்த மாநாட்டில், அவர் ரசிகர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர்களை அழைத்து, மன்றங்களை ஒருங்கிணைக்க இருக்கிறார். இது, அரசியலுக்கு வர இருக்கும் முதல் முயற்சியா? என்று கேட்டால், ஓவியா சிரிக்கிறார். ``பொறுத்திருந்து பாருங்கள்'' என்று மர்ம புன்னகையுடன் கூறுகிறார்.