சினிமா துளிகள்

13 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ்-சினேகா! + "||" + 13 years later Dhanush-Sneha

13 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ்-சினேகா!

13 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ்-சினேகா!
கடந்த 2006-ம் ஆண்டில், செல்வராகவன் டைரக்ஷனில் வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படத்தில், தனுசுடன் சினேகா இணைந்து நடித்தார். அதில் சினேகா பாலியல் தொழிலாளியாக துணிச்சலாக நடித்து இருந்தார். அவருடைய நடிப்பு அதிகமாக பேசப்பட்டது.
13 வருடங்கள் கழித்து சினேகா மீண்டும் தனுசுடன் ஜோடி சேருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு தனுசுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். ‘கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் டைரக்டு செய்கிறார். கதாநாயகன் தனுஷ் கதாபாத்திரத்துக்கு இணையான முக்கியத்துவம் சினேகா கதாபாத்திரத்துக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாக பேசப் படுகிறது!

அதிகம் வாசிக்கப்பட்டவை