சினிமா துளிகள்

‘‘அம்மா வேடத்தில், நக்மா!’’ + "||" + Nagma in the role of mother

‘‘அம்மா வேடத்தில், நக்மா!’’

‘‘அம்மா வேடத்தில், நக்மா!’’
1990-களில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களிலும் பிரபல கதாநாயகியாக இருந்தவர், நக்மா.
நக்மா ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார் உள்பட ‘சூப்பர்’ கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்தவர். இவர் சினிமாவில் ‘மார்க்கெட்’ இழந்தபின், அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.

நக்மாவுக்கு 44 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘திருமணம் என் கையில் இல்லை. கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு பொருத்தமானவர் கிடைக்கும்போது, நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்’’ என்றார்.

‘‘மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா?’’ என்ற கேள்விக்கு, ‘‘நீண்ட இடைவெளிக்குப்பின், ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறேன்’’ என்று பதில் அளித்தார். விசாரித்ததில், அந்த படத்தில் நக்மா அம்மா வேடத்தில் நடிப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து அம்மா வேடத்தில் நடிப்பது என்று அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது!