சினிமா துளிகள்

சிருஷ்டி டாங்கே அளித்த ஒத்துழைப்பு! + "||" + actress srushti dange cooperation

சிருஷ்டி டாங்கே அளித்த ஒத்துழைப்பு!

சிருஷ்டி டாங்கே அளித்த ஒத்துழைப்பு!
தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒரு சிலரே எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாமல், பந்தா காட்டாமல், அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்கிறார்கள். இதுதான் வேண்டும் என்று அவர்கள் அடம் பிடிப்பதில்லை.
‘‘தனி கேரவன் வேண்டும்...அதை கொண்டு வந்தால்தான் நடிக்க வருவேன்’’ என்று கேட்டு பிடிவாதம் செய்வதில்லை. இவ்வாறு எளிமையான சுபாவம் கொண்ட கதாநாயகிகள் பட்டியலில், சிருஷ்டி டாங்கேவும் இடம் பிடித்து இருக்கிறார்.

‘சத்ரு’ படத்தில் வந்த ஒரு பாடல் காட்சி, புதுச்சேரி கடற் கரையில் நடந்தது. அந்த இடத்தில் கேரவன் கொண்டு போக முடியவில்லை. பாடல் காட்சியில் சிருஷ்டி டாங்கே 20 முறை உடைகளை மாற்ற வேண்டியிருந்தது. அங்குள்ள ஒரு பொது கழிவறைக்குள் போய் உடைகளை மாற்றினார் என்று அந்த படத்தில் பணிபுரிந்த ஒரு உதவி டைரக்டர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...