சினிமா துளிகள்

சிவகார்த்திகேயனுக்கு வரவேற்பு! + "||" + Welcome to Sivakarthikeyan

சிவகார்த்திகேயனுக்கு வரவேற்பு!

சிவகார்த்திகேயனுக்கு வரவேற்பு!
சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் ‘வேலைக்காரன்’ படத்தில், முதன்முதலாக ஜோடி சேர்ந்தார்கள். அந்த படத்துக்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு இருந்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தருக்கு நல்ல லாபம் கிடைத்தது.
சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம், கர்நாடகாவில் ஒரு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. ஏ-1 பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் ஒரு கோடியே 17 லட்சம் கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறது.

‘மிஸ்டர் லோக்கல்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா ஒரு நிறுவனத்தின் உரிமையாளராகவும், சிவகார்த்திகேயன் தொழிலாளியாகவும் நடிப்பதாக பேசப்படுகிறது. ராஜேஷ் இயக்கி வருகிறார். நகைச்சுவை, காதல், மோதல் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகி வருகிறது.