சினிமா துளிகள்

மோகன்லால் படத்தில் ராதிகா + "||" + Radhika in Mohanlal film

மோகன்லால் படத்தில் ராதிகா

மோகன்லால் படத்தில் ராதிகா
1980-களில் தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் ராதிகா. இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ராதிகா அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் ராதிகா நடிப்பில் 1993-ம் ஆண்டு ‘அர்த்தனா’ படம் வெளியானது. அதன் பிறகு 25 ஆண்டுகளாக அவர் மலையாளத்தில் நடிக்கவில்லை. 

இந்த நிலையில் 2017-ம் ஆண்டு திலீப் நடிப்பில் வெளியான ‘ராம்லீலா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு மலையாளத்தில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. 

தற்போது ‘தி கேம்பினோஸ்’, ‘இட்டிமானி மேட் இன் சைனா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘தி கேம்பினோஸ்’ படத்தில் பெண் தாதா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறாராம். பெண் தாதா மற்றும் அவரது நான்கு பிள்ளைகளைப் பற்றிய படமாக இது உருவாகிறது. இதில் அவரது மகன்களில் ஒருவராக வில்லன் நடிகர் சம்பத் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் ‘இட்டிமானி மேட் இன் சைனா’ படத்திலும் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் ஹனிரோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மோகன்லாலுடன் ராதிகா கடைசியாக நடித்த படம் ‘கூடும் தேடி.’ 34 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள்.