சினிமா துளிகள்

விஜய் சேதுபதி ஜோடியாக 2 கதாநாயகிகள்! + "||" + Vijay Sethupathi is pairing with 2 heroines

விஜய் சேதுபதி ஜோடியாக 2 கதாநாயகிகள்!

விஜய் சேதுபதி ஜோடியாக 2 கதாநாயகிகள்!
விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள்.
விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதலில் ராஷிகன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது, நிவேதா பெத்துராஜும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

முக்கிய வேடங்களில் நாசர், சூரி, ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், மைம்கோபி, ஈஸ்வரிராவ் ஆகியோருடன் மும்பையை சேர்ந்த 2 வில்லன்களும் நடிக்கிறார்கள். விஜய்சந்தர் டைரக்டு செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஜனரஞ்சக படமாக தயாராகி வருகிறது.