மூத்த கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்த இளம் நாயகி!


மூத்த கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்த இளம் நாயகி!
x
தினத்தந்தி 30 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-30T18:43:15+05:30)

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரகுல் பிரீத்சிங் தெலுங்கு படங்களில் அதிகமாக நடிப்பதை தொடர்ந்து, ஐதராபாத்தில் சொந்தமாக வீடு கட்டி குடியேறி விட்டார்.

படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே ரகுல் பிரீத்சிங் சென்னைக்கு பறந்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் ஐதராபாத்துக்கு பறந்து விடுகிறார்.

தமிழில், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற இளம் கதாநாயகர்களுடன் மட்டுமே அவர் ஜோடியாக நடித்தார். முதிர்ந்த கதாநாயகர்களுடன் அவர் ஜோடி சேரவில்லை. ஆனால், தெலுங்கு பட உலகுக்காக அவர் தனது கொள்கையை மாற்றிக் கொண்டார். `மன்மதடு-2' என்ற தெலுங்கு படத்தில், நாகார்ஜுன் ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார்.

நாகர்ஜுனின் மகன் நாக சைதன்யா ஜோடியாக ரகுல் பிரீத்சிங் ஏற்கனவே நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரகுல் பிரீத்சிங்குக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன என்பதால்தான் அவர் நாகார்ஜுனுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார் என்று தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது!

Next Story