சினிமா துளிகள்

அஜித்குமாரின் கணிப்பு! + "||" + Ajith Kumar's prophecy

அஜித்குமாரின் கணிப்பு!

அஜித்குமாரின் கணிப்பு!
அஜித்குமார் நடித்த படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக இருக்கும். தியேட்டர்களில் வசூல் மழை பெய்யும். அதை கருத்தில் கொண்டுதான் அஜித்குமார் தனது படங்களை திரைக்கு கொண்டு வருவார்.
`வீரம்,' `வேதாளம்,' `விஸ்வாசம்' ஆகிய படங்கள் 10-ந் தேதிகளில் திரைக்கு வந்தன. அதன்படி, அஜித் நடித்துள்ள புதிய படமான `நேர்கொண்ட பார்வை'யையும் ஆகஸ்டு 10-ந் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்.

பொதுவாக இப்போதெல்லாம் பெரும் பாலான பட அதிபர்கள் தங்கள் படங்களை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை திரைக்கு கொண்டு வருகிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்களில் வசூல் பார்த்து விடுகிறார்கள். ஆனால், அஜித்குமார் அதுபற்றி கவலைப்படவில்லை. அவருடைய படம் ஆகஸ்டு 10-ந் தேதி (சனிக்கிழமை) திரைக்கு வருகிறது.

சனிக்கிழமை அன்று `ரிலீஸ்' செய்வதை பட அதிபர்கள், டைரக்டர்கள் மற்றும் கதாநாயகர்கள் விரும்புவதில்லை. விதிவிலக்காக, அஜித்குமார் துணிச்சலுடன் தனது படத்தை சனிக்கிழமை `ரிலீஸ்' செய்ய முன்வந்து இருக்கிறார்!