சினிமா துளிகள்

கே.சி.பொகாடியா இயக்கிய ‘ராக்கி’ + "||" + 'Rocky' directed by KC Pogadia

கே.சி.பொகாடியா இயக்கிய ‘ராக்கி’

கே.சி.பொகாடியா இயக்கிய ‘ராக்கி’
பிரபல இந்தி டைரக்டரும், தயாரிப்பாளருமான கே.சி.பொகாடியா முதன்முதலாக டைரக்டு செய்துள்ள தமிழ் படம், ‘ராக்கி.’
‘ராக்கி’  படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, புதுமுகம் ஈஷான்யா மகேஸ்வரி. ‘ராக்கி’ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறது. நாசர், சாயாஜி ஷிண்டே, ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இது, துப்பறியும் கதை. தன் எஜமானரை கொலை செய்த ஆசாமிகளை ‘ராக்கி’ என்ற நாய் எப்படி கண்டுபிடித்து பழிவாங்குகிறது? என்பதே திரைக்கதை!