சினிமா துளிகள்

புதிய கட்டிடத்தில் நடிகர் சங்கம் + "||" + Actor association in the new building

புதிய கட்டிடத்தில் நடிகர் சங்கம்

புதிய கட்டிடத்தில் நடிகர் சங்கம்
மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ (AMMA) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
‘அசோசியேசன் ஆப் மலையாளம் மூவி ஆர்ட்டிஸ்ட்’ என்பதன் சுருக்கம் தான் ‘அம்மா.’ இந்த சங்கத்தின் கட்டிடம் இதுநாள் வரை கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொச்சியில் நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகராக திருவனந்தபுரம் இருந்தாலும், அதிக அளவில் படப்பிடிப்பு நடைபெறும் இடமாகவும், நடிகர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் இடமாகவும் கொச்சி இருப்பதால், அங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தக் கட்டிடத்தின் சாவி, சங்க தலைவரான மோகன்லாலிடம் ஒப் படைக்கப்பட்டது. இந்த நிகழ்வை மோகன்லால் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொண்டாடினர். கட்டிடத்தின் உள்கட்டமைப்பு பணிகள் இன்னும் மூன்று மாதத்திற்குள் நிறைவடைந்து விடும். அதன் பிறகு, இந்த கட்டிடத்தில் நடிகர் சங்கம் முழுமையாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.