மோகன்லால் பட தலைப்பு சர்ச்சை


மோகன்லால் பட தலைப்பு சர்ச்சை
x
தினத்தந்தி 6 April 2019 1:45 AM GMT (Updated: 5 April 2019 10:17 AM GMT)

மோகன்லால், ஊர்வசி நடிப்பில் 1995-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி வெளியான படம் ‘ஸ்படிகம்.’

இந்தப் படத்தில் அதிரடி நாயகனாக வித்தியாசமான நடிப்பை மோகன்லால் வெளிப்படுத்தியிருந்தார். அவரது திரைப் பயணத்தில் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. படத்தை பத்ரன் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சினிமா போஸ்டர் வெளியிடப்பட்டது. ‘இரும்பன்: ஸ்படிகம்-2’ என பெயரிடப்பட்ட இந்தப் படத்தை புதுமுக இயக்குனரான பிஜூ கட்டக்கல் இயக்குவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ‘ஸ்படிகம்’ இயக்குனர் பத்ரன், “ஸ்படிகம் படத்தின் தலைப்பை பயன்படுத்துவது பற்றி யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அந்த தலைப்பை யாராவது பயன்படுத்தினாலோ, அல்லது ஸ்படிகம் படத்தில் வரும் காட்சிகளை பிரதிபலிப்பது போல் இந்தப் படத்தில் காட்சிகளை வைத்தாலோ நான் அவர்கள் மீது வழக்கு தொடர்வேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பத்ரனின் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக பிஜூ கட்டக்கல் பேசியிருக்கிறார். அவர், “ஸ்படிகம்-2 என்ற பெயரில் இரும்பன் படத்தை எடுத்தே தீருவேன். அதை ‘ஸ்படிகம்’ படம் வெளியான மார்ச் 30-ந் தேதியிலேயே அடுத்த ஆண்டில் வெளியிடுவேன்” என்று சவால் விடுப்பது போல் கூறியுள்ளார். இதனால் மலையாள திரையுலகில் ஒரு சர்ச்சை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Next Story