சினிமா துளிகள்

‘சித்திர’ நடிகையின் கணக்கு! + "||" + Account of the actress

‘சித்திர’ நடிகையின் கணக்கு!

‘சித்திர’ நடிகையின் கணக்கு!
டி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘சித்திர’ நடிகை கதாநாயகியாக நடிப்பதை விட, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்.
“கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 40 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். படம் ஓடவில்லை என்றால் அந்த தோல்வி கதாநாயகியையும் பாதிக்கும். ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்றால் 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். சம்பளமும் அதிகம் தருகிறார்கள். எனவேதான் ஒரு பாடலுக்கு ஆடுவதில், அதிக கவனம் செலுத்துகிறேன் என்கிறார், ‘சித்திரம்!’ (கணக்கு சரியாகத்தான் இருக்கிறது.)