சினிமா துளிகள்

பாவம், வினியோகஸ்தர்கள்..! + "||" + Sin, distributors ..!

பாவம், வினியோகஸ்தர்கள்..!

பாவம், வினியோகஸ்தர்கள்..!
நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தன.
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த `ஐரா' படம் அதற்கு நேர்மாறாக தோல்வி அடைந்து, நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த படத்துக்கு ஆன மொத்த செலவு, ரூ.11 கோடி. படம் ரூ.15 கோடிக்கு வியாபாரம் ஆனது. அந்த வகையில், தயாரிப்பாளருக்கு ரூ.4 கோடி லாபம் கிடைத்தது. படம் சரியாக ஓடாததால், படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் அனைவரும் அதிக நஷ்டம் அடைந்துள்ளனர்.

ரூ.10 கோடிக்கு படத்தை வாங்கிய வினியோகஸ்தருக்கு ரூ.4 கோடி மட்டுமே பங்கு தொகையாக கிடைத்து இருக்கிறது. ரூ.6 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...