சினிமா துளிகள்

நான், சாமியாடி இருக்கிறேன்! + "||" + I am a Samyadi!

நான், சாமியாடி இருக்கிறேன்!

நான், சாமியாடி இருக்கிறேன்!
தமிழ் திரையுலகில், தமிழ் பெண்கள் யாரும் நடிக்க வருவதில்லை...தமிழ் பேசும் பெண்கள் திரையுலகுக்கு வருவதில்லை...அதையும் தாண்டி வருகிற ஒன்றிரண்டு பெண்களும் பிரகாசிப்பதில்லை என்ற ஆதங்கம் நிறைய டைரக்டர்களுக்கு இருக்கிறது.
இந்த ஆதங்கத்தை நிவேதா பெத்துராஜ் போக்கியிருக்கிறார். இவர், மதுரையை சேர்ந்த தமிழ் பெண். வளர்ந்தது, படித்தது எல்லாம், துபாயில். இவருடைய தந்தை பெத்துராஜ், துபாயில் வேலை செய்கிறார். `ஒருநாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நிவேதா பெத்துராஜ், முன்னணி கதாநாயகிகள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கி விட்டார்.

இவரிடம், ``சின்ன வயதில் நீங்கள் மறக்க முடியாத சம்பவம் இருக்கிறதா?'' என்று கேட்கப்பட்டது. ``இருக்கிறது'' என்று பதில் அளித்த அவர் தொடர்ந்து கூறினார்:

``சின்ன வயதில் என்னை அம்மாவும், அப்பாவும் மதுரை அருகில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள். அங்கு எனக்கு அம்மன் அருள் வந்து சாமியாடி இருக்கிறேன்” என்றார். அந்த சம்பவத்துக்குப்பின், நிவேதா பெத்துராஜ் ஆன்மிகத்தில் தீவிரமாகி விட்டாராம்!


ஆசிரியரின் தேர்வுகள்...