சினிமா துளிகள்

இரட்டை வேடத்தில் அல்லு அர்ஜூன் + "||" + Allu Arjun in a double role

இரட்டை வேடத்தில் அல்லு அர்ஜூன்

இரட்டை வேடத்தில் அல்லு அர்ஜூன்
தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அல்லு அர்ஜூன்.
சமீப காலங்களாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. கடந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ‘நா பேரு சூர்யா.. நா இல்லு இந்தியா’ என்ற படமும் தோல்வியையே தழுவியது. இதையடுத்து கதைத் தேர்வில் கவனம் செலுத்தத் தொடங்கிய அல்லு அர்ஜூன், தன்னுடைய பிறந்த நாள் அன்று மூன்று படங்களில் நடிப்பது பற்றியும், அந்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றியும் அறிவிப்பு வெளியிட்டார். அந்த மூன்று படங்களில் திரிவிக்ரம் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதையடுத்து அடுத்த படத்திற்கான வேலைகளில் அல்லு அர்ஜூன் மும்முரமாக இறங்கியுள்ளார். ‘ஐகான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் முதன் முறையாக அல்லு அர்ஜூன் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். ‘ஓ மை பிரண்ட்’, ‘எம்.பி.ஏ.’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீராம் வேணு இயக்க இருக்கிறாராம். இதன் படப்பிடிப்பு வருகிற 24-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.