சினிமா துளிகள்

கதாநாயகியான திருநங்கை + "||" + Transgender heroine

கதாநாயகியான திருநங்கை

கதாநாயகியான திருநங்கை
மலையாளத் திரைப்படத்தில் திருநங்கை, கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
சினிமாவில் திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வது பலமுறை நடந்துள்ளது. ஆனால் சமீப கால திரைப்படங்கள் திருநங்கைகளை கவுரவப்படுத்தும் வகையில் சில காட்சிகளையோ, அல்லது பெரிய அளவிலான கதாபாத்திரங்களையோ வைத்து வருகிறார்கள். தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமாக்களில் இதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது. மலையாளத்தில் கடந்த ஆண்டு நடிகர் ஜெயசூர்யா, திருநங்கையாக நடித்து வெளியான ‘ஞான் மேரிகுட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடு அந்த படத்தில் நடித்ததற்காக, அவருக்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. ஒரு சில படங்களில் திருநங்கைகளே சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்திருந்தாலும், ஒரு படத்தில் கதாநாயகியாக திருநங்கை ஒருவர் நடிப்பது என்பது அரிதுதான். அதை செய்து காட்டியிருக்கிறது ‘தெய்வத்தின்ட மணவாட்டி’ என்ற மலையாளத் திரைப் படம். இந்தப் படத்தில் எலிசபெத் ஹரிணி சந்தனா என்ற திருநங்கை, கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் தாய்மை அடைவது போல் காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் முதல் போஸ்டரை, ‘ஞான் மேரிகுட்டி’ படத்தில் திருநங்கையாக நடித்த ஜெயசூர்யா வெளியிட்டிருந்தார்.