சினிமா துளிகள்

மீண்டும் பிருத்விராஜ்-பிஜூமேனன் கூட்டணி + "||" + Prithvi Raj - Biju Menon Alliance

மீண்டும் பிருத்விராஜ்-பிஜூமேனன் கூட்டணி

மீண்டும் பிருத்விராஜ்-பிஜூமேனன் கூட்டணி
பிருத்விராஜ்- பிஜூமேனன் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
பிருத்விராஜ் மற்றும் பிஜூமேனன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘அனார்கலி.’ இந்தப் படத்தை சாச்சி என்பவர் இயக்கியிருந்தார். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்திலும் பிருத்விராஜ்- பிஜூமேனன் கூட்டணியையே ஒப்பந்தம் செய் திருக்கிறார். இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக பிருத்விராஜும், உள்ளூரில் போலீஸ்காரராக இருக்கும் கதாபாத்திரத்தில் பிஜூமேனனும் நடிக்க இருக்கிறார்களாம். இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளை நகைச்சுவை கலந்து படமாக்க உள்ளாராம், சாச்சி. அனார்கலி படத்தைப் போலவே, இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.