சினிமா துளிகள்

விஜய்க்கு அக்காவாக தேவதர்சினி! + "||" + He is acting on both the screen and the big screen

விஜய்க்கு அக்காவாக தேவதர்சினி!

விஜய்க்கு அக்காவாக தேவதர்சினி!
சின்னத்திரை, பெரிய திரை ஆகிய இரண்டிலும் நடித்து வருபவர்
தேவதர்சினி. நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, ராகவா லாரன்சின் ‘காஞ்சனா’ படங்களில் தவறாமல் இடம் பெற்று விடுகிறார்.

இவருக்கு அடித்தது அதிர்ஷ்டம், அக்கா வேடத்தில்...விஜய் நடித்து வரும் 63-வது படத்தில், அவருக்கு அக்காவாக தேவதர்சினி நடிக்கிறார். அக்காள்-தம்பி ஆகிய இருவருக்குமான ‘காமெடி’ படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும் என்கிறார்கள்.

கால்பந்து விளையாட்டை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார்!