சினிமா துளிகள்

பி.டி.உஷாவாக கத்ரினா கைப்! + "||" + Some directors are interested in filming stories of famous heroes.

பி.டி.உஷாவாக கத்ரினா கைப்!

பி.டி.உஷாவாக கத்ரினா கைப்!
புகழ்பெற்ற வீராங்கனைகளின் கதைகளை படமாக்குவதில், சில டைரக்டர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கினால், அதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே புகழ்பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் கதைகளை படமாக்குவதில், சில டைரக்டர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், எம்.எஸ்.தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வெளிவந்தது. இதையடுத்து, பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறும் படமாகிறது. அந்த படத்தில், பி.டி.உஷா கதாபாத்திரத்தில் கத்ரினா கைப் நடிக்கிறார்!