சினிமா துளிகள்

``விவாகரத்து செய்தது ஏன்?''- விஷ்ணு விஷால் + "||" + "Why did divorce?"- Vishnu Vishal

``விவாகரத்து செய்தது ஏன்?''- விஷ்ணு விஷால்

``விவாகரத்து செய்தது ஏன்?''- விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டில் நடிகரும், டைரக்டருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். கடந்த வருடம் விஷ்ணு விஷாலுக்கும், ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனர். விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்தார்கள். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டு விட்டது.

விவாகரத்துக்கான காரணத்தை விஷ்ணு விஷால் இப்போது வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் மனம் விட்டு பேசியிருக்கிறார்.

``முன்பெல்லாம் நான் யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். அது என் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை உணர்ந்த பின், எல்லோருடனும் கலகலப்பாக பேச ஆரம்பித்தேன். அதுவே பிரச்சினைக்கு காரணமாகி விட்டது. ``நீ மாறிவிட்டாய்'' என்று என் மனைவி கூறினார். நாங்கள் சேர்ந்து இருப்பது இந்த பிரபஞ்சத்துக்கே பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.. என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக விவாகரத்து என்ற முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டது'' என்கிறார், விஷ்ணு விஷால்!

தொடர்புடைய செய்திகள்

1. ‘இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சாமி, சண்டக்கோழி, நான் அவன் இல்லை உள்ளிட்ட சில படங்கள் 2-ம் பாகமாக வந்தன.