நடிக்க வராவிட்டால், டாக்டர்!
தென்னிந்திய திரையுலகில் உள்ள முக்கிய கதாநாயகிகளில் ஒருவர், தமன்னா. இவர் ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.
இவருடைய சொந்த ஊர், மும்பை. அங்கிருந்து தெலுங்கு பட உலகம் வழியாக தமிழ் பட உலகுக்கு வந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் 15 வருடங்களாக நடித்து வருகிறார்.
``ஒருவேளை நீங்கள் நடிக்க வராமல் இருந்தால், என்ன வேலைக்கு போய் இருப்பீர்கள்?'' என்று தமன்னாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து தமன்னா கூறியதாவது:-
``நடிப்பை தவிர வேறு எந்த தொழிலையும் நான் கற்பனை செய்து கூட பார்ப்பதில்லை. நடிப்புதான் என்னை வசதியாக வைத்து இருக்கிறது. கார், பங்களா என்று சொகுசாக வாழ வைத்து இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் பல பேர் டாக்டர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை திரையுலகுக்கு வந்திருக்காவிட்டால், நானும் டாக்டர் ஆகியிருப்பேன்'' என்கிறார், தமன்னா!
Related Tags :
Next Story