சினிமா துளிகள்

கதாநாயகர்களும், பஞ்சாயத்துகளும்...! + "||" + Heroes and panchayats ...

கதாநாயகர்களும், பஞ்சாயத்துகளும்...!

கதாநாயகர்களும், பஞ்சாயத்துகளும்...!
சமீபகாலமாக எல்லா பிரபல நாயகர்கள் நடித்த படங்களும் பல ‘பஞ்சாயத்துகள்’ நடந்த பிறகே திரைக்கு வருகின்றன.
 சங்க தலைவராக இருக்கும் நடிகரின் படமும் இதற்கு விதி விலக்கு அல்ல. தனது சம்பளத்தில் ஒரு கோடியை விட்டுக் கொடுத்தபின், அவர் நடித்த படம் திரைக்கு வந்தது.

ஒரே ஒரு எழுத்தை பெயராக கொண்ட படமும் ‘பஞ்சாயத்து’க்கு வந்தது. இரண்டெழுத்து நாயகன் நடித்த அந்த படத்தின் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குள் போதும்...போதும்...என்றாகி விட்டதாம்.

“இனிமேல் நான் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன். தெலுங்கு அல்லது இந்தி பட உலகுக்கு போய்விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்” என்கிறார், அந்த இரண்டெழுத்து நாயகன். பஞ்சாயத்தில் சிக்கி படாதபாடு பட்டதால், அவர் இவ்வாறு விரக்தியாக பேசினாராம்!


தொடர்புடைய செய்திகள்

1. ஒரு கதாநாயகியின் சாதனை!
‘நம்பர்-1’ நடிகை இந்த அளவுக்கு உயர்வோம்... என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லையாம்.
2. மறைமுகமாக ஒரு போட்டி!
‘சிவ..சிவா...’ நடிகருக்கும், ‘பதி’ நடிகருக்கும் இடையே மறைமுகமாக போட்டி இருந்து வருகிறது.
3. சம்பளம் ரூ.15 கோடி ஆனது!
தகப்பன் சாமி, மகன் சாமி ஆகிய இருவரின் பெயரை கொண்ட நடிகர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.
4. இளம் நாயகனின் புதிய திட்டம்!
‘வாரிசு’ நடிகரான அந்த இளம் கதாநாயகன் சம்பள விஷயத்தில் ஒரு புதிய முடிவுக்கு வந்து இருக்கிறார்.
5. இப்போது நடன நடிகர்!
மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்தார் நடன நடிகர்.