சினிமா துளிகள்

வரலாற்று படங்களில், கனிகா! + "||" + In historical films, Kanika!

வரலாற்று படங்களில், கனிகா!

வரலாற்று படங்களில், கனிகா!
தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர், கனிகா. இவர் அஜித்துடன் நடித்த ‘வரலாறு,’ மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
கனிகா சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் மீண்டும் நடிக்க வந்து இருக் கிறார்.

‘வரலாறு’ படத்தில் நடித்ததுதானோ என்னவோ இவருக்கு வருகிற பட வாய்ப்புகள் எல்லாமே வரலாற்று படங்களாக அமைந்துள்ளன. மம்முட்டி நடித்த ‘பழசிராஜா’வில், கனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கனிகாவுக்கு மீண்டும் மம்முட்டியுடன் ஒரு மலையாள வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து இருக்கிறது. கனிகா அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நடிக்க சம்மதித்து இருக்கிறார். அவரிடம், ‘‘தொடர்ந்து வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறதே...அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு, ‘‘வரலாற்று படங்களில் நடிப்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அதுவும் மம்முட்டியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று கனிகா பதில் அளித்தார்.