சினிமா துளிகள்

காதல் வலையில், ஐஸ்வர்யா ராஜேஷ்? + "||" + Aishwarya Rajesh in love affair?

காதல் வலையில், ஐஸ்வர்யா ராஜேஷ்?

காதல் வலையில், ஐஸ்வர்யா ராஜேஷ்?
ஐஸ்வர்யா ராஜேசின் பூர்வீகம் ஆந்திரா என்றாலும், அவர் வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். அதனால் சரளமாக தமிழ் பேசுகிறார்.
ஐஸ்வர்யா ராஜேசின் அப்பாவும், அத்தையும் நடிகர்-நடிகையாக திரையுலகில் இருந்ததால், ஐஸ்வர்யா ராஜேசும் திரையுலகுக்கு வந்ததில் வியப்பு இல்லை.

இவருடைய ஆரம்ப கால திரையுலக அனுபவம் மோசமானதாக இருந்ததாம். பட வாய்ப்புகள் எளிதாக கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களும் தோல்வியை தழுவின. ‘காக்கா முட்டை’ படம், இவருக்கு திருப்பமாக அமைந்தது. நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரை பற்றி ஒரு வதந்தி, காட்டுத்தீயாக பரவியது. ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் வலையில் சிக்கி விட்டார் என்பதே அந்த வதந்தி. அவருடைய சினேகிதர்களுக்கும், சினேகிதிகளுக்கும் அந்த வதந்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. காதலர் பெயர் என்ன, அவர் என்ன செய்கிறார்? என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ‘‘அது வெறும் வதந்திதான்’’ என்று அவர் களுக்கு விளக்குவதற்குள் ஐஸ்வர்யா ராஜேசுக்கு போதும்...போதும்...என்றாகி விட்டதாம்!