சினிமா துளிகள்

தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்! + "||" + Aishwarya Rajesh in Telugu

தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!
சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்த படம், `கனா.' பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார்.
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் டைரக்டு செய்திருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த `கனா' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தெலுங்கில் தயாராகிறது. தெலுங்கு படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். படத்துக்கு, `கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.