சினிமா துளிகள்

பிருத்விராஜ் படத்தில் 4 நாயகிகள் + "||" + 4 heroines in Prithviraj's film

பிருத்விராஜ் படத்தில் 4 நாயகிகள்

பிருத்விராஜ் படத்தில் 4 நாயகிகள்
தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் பாலிவுட் என 100 படங்களில் நடித்து முடித்த நடிகர் பிருத்விராஜ், ‘லூசிபர்’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
மோகன்லாலை வைத்து பிருத்விராஜ் இயக்கிய ‘லூசிபர்’ திரைப்படம், மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதையடுத்து மீண்டும் நடிப்பின் பக்கம் தன்னுடைய கவனத்தை முழுமையாக திருப்பி இருக்கிறார், பிருத்விராஜ். தற்போது அவரது கைவசம், ‘பிரதர்ஸ் டே’, ‘ஆடுஜீவிதம்’, ‘பதினெட்டாம் படி’, ‘காளியன்’, ‘ஐயப்பன்’ என அரை டஜன் படங்கள் உள்ளது. இதில் ‘பிரதர்ஸ் டே’ படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்தப் படத்தில் மியா ஜார்ஜ், பிரயாகா மார்ட்டின், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரோடு, ‘பிரேமம்’ படம் மூலமாக பிரபலமான மடோனா ஜெபாஸ்டினும் கதாநாயகியாக நடிக்கிறார். பிருத்விராஜுடன் 4 கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தை கலாபவன் சாஜன் இயக்குகிறார்.