சினிமா துளிகள்

புதிய இயக்குனர் படத்தில் ரன்வீர் சிங் + "||" + In the new director's film Ranvir Singh

புதிய இயக்குனர் படத்தில் ரன்வீர் சிங்

புதிய இயக்குனர் படத்தில் ரன்வீர் சிங்
கடந்த 2010-ம் ஆண்டு ‘பாண்ட் பாஜா பாரத்’ படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ரன்வீர் சிங்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உருவெடுத்த  ரன்வீர் சிங்குக்கு, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ ஆகிய படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தன. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘சிம்பா’வும், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘கல்லி பாய்’ படமும் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் இதுவரை முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வந்த ரன்வீர் சிங், புதிய இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. அதை ரன்வீர் சிங் உறுதி செய்துள்ளார். ‘ஜெயோஷ் பாய் ஜோர்தார்’ என்ற இந்தப் படத்தை தியாங் தக்கார் என்பவர் எழுதி, இயக்குகிறார். யஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் மணீஷ் சர்மா இந்தப் படத்தை தயாரிக்கிறார். “தியாங் தக்காரின் எழுத்தின் மீதும், இயக்கத்தின் மீதும் எனக்கு ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக இந்தப் படத்தில் நடிக்கிறேன். இது என்னுடைய ரசிகர்களையும், சினிமாவை ரசிப்பவர்களையும் நிச்சயம் கவரும்” என்று ரன்வீர் சிங் கூறியிருக்கிறார். இந்தப் படத்தின் படப் பிடிப்பு, அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிகிறது.