சிக்கலில் தவிக்கும் சமந்தா படம்


சிக்கலில் தவிக்கும் சமந்தா படம்
x

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஓ பேபி எந்த சக்குன்னாவே’.

ஓ பேபி எந்த சக்குன்னாவே படத்தை நந்தினி ரெட்டி என்ற பெண் இயக்குனர் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு, ‘அலா மொதலாயிந்தி’, ‘ஜபர்தஸ்த்’, ‘கல்யாண வைபோகமே’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். ‘ஓ பேபி எந்த சக்குன்னாவே’ படத்தில் சமந்தா பாட்டி- பேத்தி ஆகிய இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், படத்தைப் போட்டுப் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ், “படத்தில் சமந்தாவின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லை. எனவே காட்சிகளை மறுபடியும் எடுக்க வேண்டும்” என்று இயக்குனரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் “படத்தில் சமந்தா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். அதனால் மீண்டும் காட்சிகளை படமாக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று மறுத்து விட்டாராம், நந்தினி ரெட்டி. இதனால் படம் வெளியாவதில் சிக்கலை சந்தித்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story