ஜோதிகா நடித்து வந்த ஒரு புதிய படத்தை கவுதம் ராஜ் டைரக்டு செய்து வந்தார்.
இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது. படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து படம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் அந்த படத்துக்கு, ராட்சசி என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் ஜோதிகா அரசு பள்ளி ஆசிரியையாக நடித்து இருக்கிறார்.
ஜோதிகா வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு அவரது நடிப்பில் 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் வந்தன.