சினிமா துளிகள்

‘நம்பர்-1’ நடிகைக்கு பாராட்டு! + "||" + Number -1 Actress Complimentary

‘நம்பர்-1’ நடிகைக்கு பாராட்டு!

‘நம்பர்-1’ நடிகைக்கு பாராட்டு!
நம்பர்-1 நடிகைக்கு இளம் டைரக்டர் ஒருவர் பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்.
“சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்து விடும் நாயகிகளில் முதன்மையானவர், ‘நம்பர்-1’ நடிகைதான். இந்த விஷயத்தில் அவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனை அப்படியே பின்பற்றுகிறார். எவ்வளவு உச்சத்துக்கு போனாலும் பழையதை மறக்காதவர்...தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்” என்று அந்த நடிகைக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறார், ஒரு இளம் டைரக்டர்! (பி.கு: இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.)