சினிமா துளிகள்

‘‘மேக்கப் இல்லாமல், டை அடிக்காமல் நடிக்க வைத்தார்’’ + "||" + Acted without makeup and without tie

‘‘மேக்கப் இல்லாமல், டை அடிக்காமல் நடிக்க வைத்தார்’’

‘‘மேக்கப் இல்லாமல், டை அடிக்காமல் நடிக்க வைத்தார்’’
நகைச்சுவை நடிகர் சார்லி சத்தமே இல்லாமல் ஒரு சாதனை புரிந்து இருக்கிறார். இதுவரை 567 படங்களில் அவர் நடித்து இருக்கிறார். இப்போது ‘பிழை,’ ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்,’ ‘வால்டர்’ ஆகிய மூன்று புதிய படங்களில் நடித்து வருகிறார்.
‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ சத்யராஜ் நடிக்கும் படம். ‘வால்டர்’ சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த படம். ‘பிழை’ படம் பற்றி சார்லி கூறுகிறார்:-

‘‘இந்த படத்தின் டைரக்டர் ராஜவேல் கிருஷ்ணா, ஒரு சிறந்த ஓவியர். அதனால்தான் படத்தையும் காட்சிக்கு காட்சி, ஓவியம் போல் எடுத்து இருக்கிறார். என்னையும் மேக்கப் இல்லாமல், டை அடிக்காமல், இயல்பான தாடியுடன் நடிக்க வைத்தார்.

கதை எங்கே நடக்கிறதோ, அங்கே போய் படப்பிடிப்பு நடத்தினார்கள். இது, ஒரு பேசப்படும் படமாக அமையும். படத்தின் பெயரில் ‘பிழை’ இருந்தாலும், பிழையில்லாத வெற்றி படமாக இருக்கும்.’’