சினிமா துளிகள்

குத்து சண்டை வீரராக அருண் விஜய்! + "||" + Arun Vijay as boxer

குத்து சண்டை வீரராக அருண் விஜய்!

குத்து சண்டை வீரராக அருண் விஜய்!
உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் கதாநாயகர்கள் ஒரு சிலரே. அவர்களில் அருண் விஜய்யும் ஒருவர்.
இதற்காக அவர் `ஜிம்’முக்கு போய் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஒரு அதிரடி கதாநாயகனுக்கே உரிய கம்பீர தோற்றம் கொண்ட இவர், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அருண் விஜய் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த `தடம்’ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. படமும் வெற்றி பெற்று அமோக வசூலை பெற்று கொடுத்தது. இதையடுத்து அருண் விஜய், `பாக்ஸர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார்.

சிறந்த கதைகளை தேர்வு செய்ய எவ்வளவு அக்கறை காட்டுகிறாரோ, அதேபோல் குடும்ப உறவுகளை பாதுகாப்பதிலும் அருண் விஜய் அக்கறை காட்டுகிறார். அப்பா விஜயகுமார், அம்மா, மனைவி, சகோதரிகள், மைத்துனர் டைரக்டர் ஹரி ஆகியோரிடமும் பாசமாக இருக்கிறார்!