சினிமா துளிகள்

நிபந்தனை விதிக்கும் நடிகை! + "||" + Condition imposed by the actress

நிபந்தனை விதிக்கும் நடிகை!

நிபந்தனை விதிக்கும் நடிகை!
ஜீவா கதாநாயகனாக நடித்த `முகமூடி' படத்தில் கதாநாயகியாக நடித்தவர், பூஜா ஹெக்டே. இவர், மும்பையை சேர்ந்தவர்.
 `முகமூடி' படத்துக்குப்பின் இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது இவர், பிரபாஸ் ஜோடியாக ஒரு தெலுங்கு படத்திலும், `ஹவுஸ்புல்-4' என்ற இந்தி படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம் பூஜா ஹெக்டே ஒரே ஒரு நிபந்தனையை விதிக்கிறார்.

படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில், நான் ஜாலியாக இருப்பேன். அதை டைரக்டரும், தயாரிப்பாளரும் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. என்னைப் போலவே டைரக்டரும், தயாரிப்பாளரும் கலகலப்பாக இருக்க வேண்டும். `உர்' என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருப்பவர்களை எனக்கு பிடிக்காது. கண்டிப்புடன் இருப்பவர்களுடன் நான் வேலை செய்ய மாட்டேன்'' என்கிறார், பூஜா ஹெக்டே!