சினிமா துளிகள்

மோகன்லால் மகனுடன் நடிக்க மறுப்பு! + "||" + Keerthi Suresh refuses to acting at Mohanlal's son

மோகன்லால் மகனுடன் நடிக்க மறுப்பு!

மோகன்லால் மகனுடன் நடிக்க மறுப்பு!
மலையாள பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ்.
பிரணவ் தமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தில் பிரணவ் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

முதலில் சம்மதம் தெரிவித்த கீர்த்தி சுரேஷ், பின்னர் ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தாராம். ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைப்பதா? அல்லது குறைந்த சம்பளத்துக்கு சம்மதிக்கும் வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்று பட தயாரிப்பாளர் யோசித்து வருகிறார்!