சினிமா துளிகள்

பின்னணி இசையில் விஷால் சந்திரசேகர்! + "||" + Vishal Chandrasekhar in background music!

பின்னணி இசையில் விஷால் சந்திரசேகர்!

பின்னணி இசையில் விஷால் சந்திரசேகர்!
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில், 20 படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார், விஷால் சந்திரசேகர். 250 விளம்பர படங்கள், 450 குறும் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
விஷால் சந்திரசேகர் சொல்கிறார்:- நான் இசையமைத்த பாடல்களை விட, பின்னணி இசைக்கு அதிக வரவேற்பும், ஆதரவும் இருந்திருக்கிறது. பின்னணி இசை ஒரே மாதிரியாக இல்லாமல், வெவ்வேறு அம்சங்களில் இருப்பதற்கு உலகத்தில் உள்ள பல மொழி படங்களின் இசையையும் கேட்க வேண்டும். அப்போதுதான் தற்போதைய நடைமுறையை தெரிந்து கொண்டு இசையமைக்க முடியும்.

தற்போது கோபி சந்துரு கதாநாயகனாக நடிக்க, திரு இயக்கும் `சாணக்யா' என்ற தெலுங்கு படத்துக்கு இசையமைத்து வருகிறேன். தமிழ் படத்தை பற்றிய அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன்'' என்கிறார், விஷால் சந்திரசேகர்.