சினிமா துளிகள்

ராதாமோகனுடன் எஸ்.ஜே.சூர்யா! + "||" + SJ Surya with Radhamohan!

ராதாமோகனுடன் எஸ்.ஜே.சூர்யா!

ராதாமோகனுடன் எஸ்.ஜே.சூர்யா!
எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவுக்கு டைரக்டராக அறிமுகமானார். இவர் டைரக்டு செய்த படங்கள் அனைத்தும் `ஹிட்' அடித்தன.
விஜய், அஜித் ஆகிய இரு பெரும் கதாநாயகர்களை வைத்து டைரக்டு செய்த இவர் பின்னர், கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இவர் கதாநாயகனாக நடித்த பெரும்பான்மையான படங்கள் வெற்றி பெற்றன. அதற்கு உதாரணம், சமீபத்தில் வெளிவந்த `மான்ஸ்டர்' படம்.

இதைத்தொடர்ந்து இவர், டைரக்டர் ராதாமோகனுடன் ஒரு புதிய படத்தில் கைகோர்க்க இருக்கிறார். ராதா மோகன் இதற்கு முன்பு, `காற்றின் மொழி' படத்தை டைரக்டு செய்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும், ராதாமோகனும் இணைந்து பணிபுரியும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.