சினிமா துளிகள்

கார் பந்தய படத்தில், அஜித்! + "||" + In car racing movie, Ajith!

கார் பந்தய படத்தில், அஜித்!

கார் பந்தய படத்தில், அஜித்!
2019-ம் ஆண்டு அஜித்குமாருக்கு அதிர்ஷ்டகரமானதாக அமைந்து விட்டது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவர் நடித்த `விஸ்வாசம்' வெளிவந்து வெற்றி பெற்றது.
 `நேர்கொண்ட பார்வை' திரைக்கு வந்து இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது, அஜித் நடித்த 59-வது படம். போனிகபூர் தயாரித்தார். வினோத் டைரக்டு செய்தார்.

அவரின் 60-வது படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். வினோத்தே டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என்று பேசப்பட்டது. இப்போது யுவன் சங்கர் ராஜாவின் பெயர் அடிபடுகிறது.

இது பைக் மற்றும் கார் பந்தய கதை என்பதால் யுவன் சங்கர் ராஜாதான் பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது.