சினிமா துளிகள்

ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘மிஷன் மங்கள்’ + "||" + Over Rs 100 crore Mission Mangal

ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘மிஷன் மங்கள்’

ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘மிஷன் மங்கள்’
‘மிஷன் மங்கள்’ திரைப்படம் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.
கடந்த வாரத்தில் சுதந்திர தினத்தன்று வெளியானது, ‘மிஷன் மங்கள்’ திரைப்படம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் பற்றியதாக இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பாலிவுட் முன்னணி நட்சத்திரமான அக்‌ஷய்குமார், வித்யாபாலன், சோனாக்‌ஷி சின்ஹா, டாப்சி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே 30 கோடி ரூபாயை ஈட்டியிருக்கிறது. 5 நாட்களில் ரூ.100 கோடி  வசூல் செய்துள்ளது. தொடர்ந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பாலிவுட்டில் அக்‌ஷய்குமாரின் படத்திற்கு, மிகப்பெரிய ஓபனிங் கொடுத்த படமாகவும் இது மாறியிருக்கிறது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் அக்‌ஷய்குமாரின் ரூ.100 கோடி வசூல் படத்தில் ‘மிஷன் மங்கள்’ திரைப்படமும் இணைந்திருக் கிறது. இதன் மூலம் அக்‌ஷய்குமாரின் ரூ.100 கோடி வசூல் படத்தில், 11-வது படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.