ஒரு எழுத்தாளர் நடிகர் ஆனது எப்படி?


ஒரு எழுத்தாளர் நடிகர் ஆனது எப்படி?
x
தினத்தந்தி 30 Aug 2019 9:59 AM GMT (Updated: 30 Aug 2019 9:59 AM GMT)

“வேல.ராமமூர்த்தி என்ற எழுத்தாளர் இப்போது பயங்கரமான வில்லன் நடிகராக பிரபலம் ஆகிவிட்டார். இதில், உங்களுக்கு மகிழ்ச்சியா, வருத்தமா?” என்று அவரிடமே கேட்கப்பட்டது. “ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் வருத்தம்” என்றார். எப்படி?

“சினிமாவில் பிரபலமானதில் சந்தோஷம். எழுதுவதற்கு இப்போது நேரம் கிடைக்கவில்லையே என்பதில் வருத்தம்” என்று விளக்கம் சொன்னார், வேல.ராமமூர்த்தி. நகைச்சுவை நடிகர் செந்திலின் சொந்த ஊரான இளம் செம்பூர்தான் இவருக்கும் சொந்த ஊர். முதலில் ராணுவத்தில் பணிபுரிந்தேன். அப்புறம், ‘போஸ்ட் மாஸ்டர்’ ஆனேன்.

‘மதயானை கூட்டம்’ படத்தில்தான் அறிமுகமானேன். இதுவரை 16 படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன். நான், சிவாஜியின் ரசிகராக இருந்தவன். பிற்காலத்தில் கமல்ஹாசன் ரசிகனாகி விட்டேன். எனக்கு 67 வயது ஆகிறது. 6 பேரன்-பேத்திகள் இருக்கிறார்கள்.

‘கிடாரி’ படத்தில் நான் கோவணத்துடன் நடித்ததை ஒரு சவாலாக கருதுகிறேன். தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரம் அமைந்தால், சவாலாக ஏற்றுக்கொண்டு துணிச்சலுடன் நடிப்பேன்” என்கிறார், வேல.ராமமூர்த்தி.

Next Story