சினிமா துளிகள்

‘மழை பிடிக்காத மனிதர்!’ + "||" + malai pidikatha manithar

‘மழை பிடிக்காத மனிதர்!’

‘மழை பிடிக்காத மனிதர்!’
விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்துக்கு ‘மழை பிடிக்காத மனிதர்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளர், டைரக்டர் என அழுத்தமாக தடம் பதித்தவர், விஜய் மில்டன். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள, கடுகு, கோலி சோடா-2 ஆகிய படங்களுக்கு பிறகு இவர் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘மழை பிடிக்காத மனிதர்’ என்று அவர் பெயர் சூட்டியிருக்கிறார்.

இதில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க முன்வந்து இருக்கிறார், ஸ்ரீதிவ்யா!