சினிமா துளிகள்

தனுசை பயப்பட வைத்த நடிகை! + "||" + Actress is afraid Dhanush

தனுசை பயப்பட வைத்த நடிகை!

தனுசை பயப்பட வைத்த நடிகை!
மஞ்சுவாரியர் நடிப்பை பார்த்து தனுஷ் பயந்து போனாராம்.
வெற்றிமாறன் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் ‘அசுரன்’ படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இவருடைய நடிப்பை பார்த்து தனுஷ் பயந்து போனாராம். இதுபற்றி அவர் கூறியதாவது:-

‘‘மஞ்சுவாரியர் நடிப்பதே தெரியாது. நடிக்கும்போது கதாபாத்திரமாக மாறி விடுவார். நடித்து முடித்ததும் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விடுவார். என்னால் கதாபாத்திரத்தில் இருந்து உடனே வெளிவர முடியாது. அப்படியே இருப்பேன். ஆனால் மஞ்சுவாரியர் நடித்து முடித்த அடுத்த நிமிடமே ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டிருப்பார். இது எப்படி அவரால் முடிகிறது என்று தெரியவில்லை’’ என்று மஞ்சுவாரியரை புகழ்ந்தார், தனுஷ்!